சீதையை கைவிட்டதாக ராமர் மீது வழக்கு
நீதிமன்றங்களில் பல வினோத வழக்குகள் அவ்வப்போது தாக்கல் செய்யப்பட்டு, அது நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், தள்ளுபடிக்கும் உள்ளான சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருக்கிறோம்.
இந்த நிலையில், பீகாரில் உள்ள சிடாமார்ஹி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் நம்ப முடியாத ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது என்னவெனில், கடவுள் ராமர் மீதும் அவருடைய தம்பியான லட்சுமணன் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கறிஞர் சந்தன் சிங் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில், கடவுள் ராமர் தனது மனைவியான சீதையை கைவிட்டுவிட்டதாகவும் இதற்கு லட்சுமணனும் உடைந்தையாக இருந்தார் எனவும் பின்னர் உண்மையை ஆராயாமல், சீதையை இழிவுபடுத்திவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது இந்த செயல் இந்து மக்களின் மதநம்பிக்கையையும், மனங்களையும் காயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக சந்தன் குமார் சிங்குக்கு எதிராக சீதாமரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மூன்று பேர் புகார் மனுக்களை தாக்கல் செய்தனர்.
சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென சந்தன் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த சீதாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ் பிஹாரி,
இந்த மனுவில் உளவியல் மற்றும் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் இதை விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதி தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.