Breaking News

யோசித காரணமாக மேர்வினும் புத்திர சோகத்தை உணர்ந்துள்ளார்



பிள்ளையொன்று நெருக்கடிகளை எதிர்நோக்கும் போது ஏற்படும் சோகத்தை உணர்ந்துள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தாது ராஜபக்சக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அநீதி இழைத்தால் மக்களுடன் இணைந்து குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை.ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியலில் களமிறங்கிய நான் நன்றி உணர்வு மிக்கவனாகும்.

நீண்ட காலமாக ராஜபக்சக்களை தெரிந்த எனக்கு இந்த சம்பவம் பெரும் மன வருத்தங்களை தருகின்றது.எவ்வாறெனினும் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக போராட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.