வடக்குக்கு வருகிறார் பொன்சேகா!
பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரைவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வரவுள்ளார்.
இவ்வாரம் தலதா மாளிகைக்குச் செல்லவுள்ள அவர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசிபெறவுள்ளார். அதன்பின்னர் மாவட்ட ரீதியில் பயணம் மேற்கொள்வதற்கு அவர் உத்தேசித்துள்ளார். இதன் ஓர் அங்கமாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர் வருகை தரவுள்ளார்.