வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை
இலங்கை வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாஇந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவக் குழு அனுமதி மறுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு சிங்கப்யூர் அரசாங்கத்தின் நிபுணர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தில் ஆற்றலைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
அதேவேளை, இந்த திட்டத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்திய நிபுணர்களின் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளும் திட்டம் ஒன்று வெளிவிவகார அமைச்சினால் முன்மொழியப்பட்டது.
ஆனால், அதனை நிராகரித்துள்ள அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவக் குழு, சிங்கப்பூரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.இதற்கான உதவியை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணங்கியுள்ளது.