பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு 28ஆம் திகதி வவுனியாவில்
தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட ‘தீர்வுத்திட்ட முன்வரைவு’ குறித்து பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன், சமூக செயற்பாட்டாளர் ரி.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது நிபுணர்குழு உறுப்பினர்களான சட்டத்தரணி, ந.காண்டீபன், சட்டத்தரணி, வி.புவிதரன், சமுக செயற்பாட்டாளர் ரி.பரந்தாமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு, தமிழ் மக்கள் பேரவை தொடர்பிலும், அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலும் தமது சந்தேகங்களை தீர்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.