காணாமல் போனவர்கள் இறந்திருப்பர் ?-சம்பந்தன்(காணொளி)
இறுதிப்போரிலும் அதனை அண்மித்த போர்ச்சூழலின் போதும் காணாமல் போனவர்கள் துரதிஸ்ட வசமாக இறந்திருக்கலாம். அவ்வாறு அவர்கள் இறந்திருந்தால் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற உண்மையை உண்மையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு அந்த உண்மையை ஏற்றபிறகு நின்மதியடைந்து அந்த குடும்பத்திற்கு அரசாங்கத்தால் பரிகாரம் வழங்கப்படுமென்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த தைபொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் யாழில் தெரிவித்த அதே கருத்தை ஒருமாதம் கடந்து இன்று சம்பந்தன் கூறியுள்ளது காணாமல் போன உறவுகளை தேடிவரும் உறவுகளின் மனங்களில் பெரும் வேதனையை தோற்றுவித்திருக்கின்றது.
இந்த காணாமல் போன உறவுகளுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் ஏற்பாட்டை மகிந்த அரசு ஆரம்பித்தவேளை அதனை கடுமையாக எதிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இன்று ரணில் சொல்லும் அதே கருத்தை சம்பந்தன் மறைமுகமாக சொல்லுகின்றார்.
சம்பந்தன் அவர்கள் வழங்கிய முழுமையான நேர்காணல்
இதே வேளை காணாமல் போன உறவுகளுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதோடு முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தலைவர் கக்கீம் மட்டும் தனது கருத்தை பதிவுசெய்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
கக்கீம் பாராளுமன்றில் ஆற்றிய உரையிலிருந்து |
ஆனால் வடமாகாணசபை வினைத்திறனுடன் இயங்கவில்லை என குற்றம்சாட்டும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கவோ திருத்தங்களை மேற்கொள்ளவோ இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.