இன்று அமைச்சராகப் பதவியேற்கிறார் பொன்சேகா
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாண அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, ஐதேகவின் தேசியப்பட்டியல் மூலம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டதற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.