ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி! பாராளுமன்றில் மாவை(காணொளி)
உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில்
பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் வெற்றிபெறும் வகையில் த.தே.கூட்டமைப்பால் எந்த ஒரு பெண்பிரதிநிதியையும் போட்டியிட வைக்காத மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்திருப்பது மிகவும் கவலைக்குரியது. (அதற்குரிய ஆதாரம்)
கடந்த தேர்தலில் அனந்தி சசிதரன் போட்டியிட முன்வந்தபோதும் அதற்கு தனது கட்சியிலோஅல்லது வேறு கட்சியிலோ போட்டியிட அனுமதித்தால் ஆண்களின் வெற்றிவாய்ப்பு குறிப்பாக தனது அல்லது சுமந்திரன் வெளியேற வேண்டுமென்பதால் தோல்வியடையக்கூடியவாறு ஒரு அறிமுகமில்லாத ஒருவரை கடமைக்காக போட்டியிட வைத்து தங்கள் வெற்றிகளை உறுதிப்படுத்திக்கொண்ட மாவை இன்று பாராளுமன்றத்தில் ஞானஉபதேசம் செய்வது கவலைக்குரிய விடயமாகும்.
இடம் கொடுத்த சுரேஸ் தடுத்து நிறத்தினார் மாவை-அனந்தி(காணொளி)
கூட்டமைப்புக்குள்ளே துரோகிகளை நிராகரியுங்கள்-அனந்தி(காணொளி)
இடம் கொடுத்த சுரேஸ் தடுத்து நிறத்தினார் மாவை-அனந்தி(காணொளி)
கூட்டமைப்புக்குள்ளே துரோகிகளை நிராகரியுங்கள்-அனந்தி(காணொளி)