Breaking News

நளினி தந்தையின் உடல் சென்னையில் அடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள சங்கனாபுரத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். 1984ல் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருக்கு ரவி, மனோகரன் ஆகிய மகன்கள் உள்ளனர்.

இவரது மகள் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைபெற்று சென்னை சிறையில் உள்ளார். சங்கரநாராயணன், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள அம்பலவாணபுரத்தில் இளைய மகன் மனோகரனுடன் வசித்துவந்தார். 

 நேற்று அவர் தமது 91வது வயதில் காலமானார். அவரது உடல் சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் மகன் ரவி வீட்டிற்குகொண்டுசெல்லப்பட்டது. நெல்லையில் இருந்து வேனில் அவரது உடலை மகன் மனோகரன் மற்றும் குடும்பத்தினர் கொண்டுசென்றனர். இன்று சென்னையில் இறுதிசடங்குகள் நடக்கிறது.