Breaking News

வடக்கு மாகாண சபை­யுடன் இணைந்து செய­லாற்­றுவேன் - வட­மா­காண புதிய ஆளுநர்

வடக்­கு­ மா­காண சபை­யு­டனும் அதன் முத­ல­மைச்­ச­ரு­டனும் நான் இணைந்து செய­லாற்­றுவேன். இங்­குள்ள மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்­வதே எனது நோக்கமாகும் என வட­மா­காண புதிய ஆளு­ந­ராக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ரெஜினோல்ட்குரே தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்தில் அமைந்­துள்ள வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில் நேற்­றைய தினம் கட­மை­யினைப் பொறுப்­பேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வந்த பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளது பிர­சன்னம் எனக்கு மகிழ்ச்­சியை ஊட்­டு­கின்­றது. நான் மாகாண சபை உறுப்­பி­ன­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்­த­போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யா­ரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அம்­மணி நீங்கள் பல­ருடன் பணி­யாற்­றி­யுள்­ளீர்கள். பல நாடு­க­ளுக்கும் சென்று வந்­துள்­ளீர்கள். இலங்­கையைப் பற்றி உங்கள் அபிப்­பி­ராயம் என்ன? எனக் கேட்டேன்.

உல­கத்­தி­லேயே அழ­கான நாடு இலங்­கை­யென அவர் எனக்கு பதில் வழங்­கி­யி­ருந்தார். அவரின் பதி­லினால் நான் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். இருந்­த­போதும் ஏன் எமது நாடு வறிய நாடா­கவே இருந்து வரு­கின்­றது என்ற கேள்வி என்­னிடம் நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கின்­றது. ஏனெனில் நாட்­டி­லுள்ள அனை­வ­ரதும் வெளித்­தோற்றம் சிறப்­பாக அமைந்­துள்­ளது. எனினும் வறு­மைக்­கான காரணம் மக்­களின் மனத்­திலும் தொலை­நோக்­கி­லுமே அமைந்­துள்­ளது என்­பதை நான் உணர்ந்து கொண்டேன்.

எனவே நாங்கள் அபி­வி­ருத்­தி­காண வேண்­டு­மாயின் எங்­க­ளது மனத்தில் மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும். மாறு­பா­டுகள் இருக்­கத்தான் செய்­கின்­றன. இந்­நி­லையில் வேற்­று­மையில் ஒற்­று­மை­காண நாம் முய­ல­வேண்டும். நாங்கள் சுதந்­தி­ரத்­தையும், சார்ந்­தி­ருத்­த­லையும் கலந்து பார்க்­க­வேண்டும். பொரு­ளா­தாரம், தகவல் பரி­மாற்றம் போன்ற எல்­லா­வற்­றிலும் நாடுகள் ஒன்­றை­யொன்று சார்ந்து நிற்­கின்­றன. எமது சாப்­பாட்டுக் கோப்­பையில் இந்­தி­யாவின் அரி­சியும் மாலை­தீவின் கரு­வாடும் காணப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை நாம் வைத்­தி­ய­சா­லையில் இரத்­தத்தை ஏற்­றும்­போது சாதி, மதம் பார்ப்­ப­தில்லை. தனித்­தூய்மை என்­பது கட்­டுக்­க­தை­யாகும். எனவே கலப்­புத்­தன்­மையே சிறந்த பெறு­பே­று­களைத் தரு­கின்­றது. கலப்­புப்­பிள்­ளைகள் சிறப்­பாக வள­ரு­கின்­றனர். தற்­போது சிலர் சிங்­கலே என்று கோஷ­மி­டு­கின்­றனர். அவ்­வாறு கோஷ­மிடும் சிங்­க­லே­யிலும் கூட கலப்­புத்­தன்­மை­யுள்­ளது. இந்­திய அர­சர்கள் இலங்­கையில் பெண்­ணெ­டுத்­தனர். பல முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­களை மணந்­துள்­ளனர்.

நான் மாகாண சபையில் இருந்­த­போது அபி­வி­ருத்தி வேலையில் தமிழ் ஒப்­பந்­தக்­கா­ரரும் வேலை­யாட்­க­ளுமே ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். எனவே இதே­போன்று தற்­போதும் சகல அபி­வி­ருத்தி வேலை­க­ளிலும் தமிழ் மக்கள் ஈடு­ப­டுத்­தப்­படல் வேண்டும்.

சகல சம­யங்­களின் குறிக்­கோளும் ஒன்றே என ரவீந்­தி­ரநாத் தாகூர் கூறி­யி­ருந்தார். அத்­த­கைய சம­யங்கள் எம்மை வழி நடத்­து­கின்­றன. என்­னு­டைய தந்­தையார் ஒரு கிறிஸ்­தவர். தாய் பௌத்த மதத்தைச் சேர்ந்­தவர். அவர்கள் இரு­வரும் வேறு வேறு சாதியை சேர்ந்­த­வர்கள். ஆனால் எமது குடும்­பத்தில் எந்தப் பிரச்­சி­னையும் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. நான் மார்க்­சி­ய­வா­தி­யாக இருந்­த­போது மூன்றரை வருடங்கள் சிறையில் கழித்தேன். நான் 13ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்தேன். மூன்று முறை சுடப்­பட்­ட­போதும் தப்­பி­யி­ருந்தேன்.

நான் முத­ல­மைச்­ச­ரு­டனும் மாகாண சபை­யு­டனும் ஒத்துழைப்புடன் செயற்படுவேன். நாங்கள் மக்களைச் மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவோம். அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாகவிகாரையில் வழிபட்டது நல்ல சமிக்ஞையாகும்.

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக் இலை பாரமா, கொடிக்குத் தாய் பாரமா என்ற பாடல் போன்று இலங்கைத் தாய்க்கு நாங்கள் பாரமில்லை என வாழ்ந்து காட்டவேண்டும் என்றார்.