Breaking News

நாட்டில் சர்வாதிகார ஆட்சி- கோட்டாபய

நாட்டில் தற்பொழுது நல்லாட்சிக்குப் பகரமாக செயற்படுவது, சட்டமும் ஒழுங்கும் இல்லாத சர்வாதிகார ஆட்சியாகும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடித்து சமாதானத்தை ஏற்படுத்தித் தந்த தலைவரின் பிள்ளைகளை கைது செய்து, பழிவாங்கல் மேற்கொள்ளப்படுவதை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யோசித ராஜபக்ஷவின் கைது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.