Breaking News

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே விக்கியை சாடிய சுமந்திரன்

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப்பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சாடைபேசியுள்ளார். 

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற புதிய ஆளுனரின் கடமைகள் பொறுப்பேற்கும் நிகழ்விலேயே மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்த முதலமைச்சர் அங்கு விருந்தினர் வரிசையில் அமர்ந்திருந்த சுமந்திரனைப்பார்த்து "உனது ஆசிரியர் மீது பிழை பிடிப்பதை நிறுத்தி விட்டாயா" என்று சிரித்துக்கொண்டே கேள்வியெழுப்பினார். அதற்கு சுமந்திரன் பெரிதாக சிரித்துவிட்டு.. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று நக்கலாக பதிலளித்துவிட்டு அமைதியானார்