Breaking News

வட்டுவாகலில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமது காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தமது குடியிருப்புக்காணிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காணிகளே இவ்வாறு கையகப்படுத்தபட்டுள்ளதாகவும் இதனால் வாழ்வாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர் 

இவ்வாறு இராணுவத்தால் 50 குடும்பங்களின் சுமார் 390 ஏக்கர் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.சொந்தமாக காணிக்குரிய ஆவணங்கள் இருந்தபோதும் அவற்றை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாகவும் இதுவரை பல்வேறு தரப்பிடம் கோரிக்கைகள் முன்வைத்தபோதும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 59 டிவிசன் இராணுவத்தினரே தமது காணிகளை கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.