Breaking News

மேலும் சில மோசடி அரசியல்வாதிகளின் பெயர்கள் விரைவில்!

கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய மேலும் பல அரசியல்வாதிகள், உயர்மட்ட அரச அதிகாரிகள் சிலரின் பெயர் விபரங்கள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை மேலும் ஒரு வருடத்தினால் நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதற்கமைய குறித்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாரிய ஊழல் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகளில் மேலும் சிலவற்றை விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகவும், இவை விரைவில் விசாரிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரச உயர் மட்ட அதிகாரிகள் சிலரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.