Breaking News

அர­சியல் கைதி­க­ளுக்கு தண்­டனை - சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் முயற்சி

அர­சியல் கைதி­க­ளுக்கு எப்­ப­டி­யேனும் தண்­டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் சிலர் முயற்­சிப்­ப­தாக அர­சியல் கைதிகள் விவ­கா­ரங்­களை விசா­ரணை செய்யும் சிறப்பு நீதி­மன்றின் நீதி­பதி ஐராங்­கனி பெரே­ராவின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது. 

பிணை வழங்­கப்­பட்ட 14 அர­சியல் கைதி­களை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்தல் தொடர்பில் சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக தெரி­வித்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு சிறப்பு நீதி­மன்றில் முன்­வைத்த கோரிக்கை தொடர்பில் பிணை வழங்­கப்­பட்­ட­வர்கள் சார்­பி­லேயே மேற்­படி விடயம் நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது.

இது தொடர்­பான வழக்கு நேற்று காலை சிறப்பு மேல் நீதி­மன்றில் நீதி­பதி ஐராங்­கனி பெரேரா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது கைதிகள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான டீ.எஸ். ரத்­னவேல், கே.வி. தவ­ராசா ஆகியோர் மன்றில் பிர­சன்­ன­மா­கினர்.

கடந்த 2015.11.11 மற்றும் 2015.11.16 ஆம் திக­தி­களில் 39 அர­சியல் கைதிகள் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர். அவர்­களில் 14 பேரை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை எமக்கு கிடைத்­துள்­ளது என இதன்­போது ஆஜ­ரான பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அதி­காரி மன்­றுக்கு அறி­வித்­த­துடன் அதற்­கான உத்­த­ர­வொன்றை பிறப்­பிக்­கு­மாறும் கோரினார்.

எனினும் அர­சியல் கைதி­களின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர்.இதன் போது வாதத்­தினை முன்­வைத்த இரத்­தி­னவேல்;

இந்த அர­சியல் கைதிகள் (பிணை வழங்­கப்­பட்­ட­வர்கள்) அனை­வரும் அப்­பா­விகள் அவர்கள் வெளி­நாட்டில் இருந்து வரும்­போதே கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் புனர்­வாழ்­வுக்கு விரும்­ப­வில்லை. அதற்­கான அவ­சி­யமும் இல்லை என்றார்.

இத­னை­ய­டுத்து சிரேஷ்ட சட்­டத்­த­ரணி தவ­ராசா தனது வாதத்தை முன்­வைத்தார்.உண்­மையில் கடந்த நவம்பர் மாதம் 69 பேருக்கு பிணை வழங்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது. எனினும் 39 பேருக்கு மட்­டுமே பிணை வழங்­கப்­பட்­டது.

இதன்­போது எந்த பிணை நிபந்­த­னையும் விதிக்­கப்­ப­ட­வில்லை. எனினும் தற்­போது 14 பேருக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் என்­கின்­றனர். இது அசா­தா­ர­ணமா­னது.உண்­மையில் சட்­டமா அதிபர் சொலி­சிற்றர் ஜெனரல் ஆகியோர் சிறைக்கு சென்று அர­சியல் கைதி­களை சந்­தித்­த­போது அங்கு 99 பேர் புனர்­வாழ்­வுக்கு விருப்பம் தெரி­வித்­தனர். எனினும் அவர்­களில் 14 பேருக்கு புனர்­வாழ்­வ­ளிக்க முடி­யாது என சட்­டமா அதிபர் திணைக்­களம் அறி­வித்­தது.

இந்­நி­லையில் நிபந்­த­னை­யின்றி பிணையில் விடு­த­லை­யான இவர்கள் புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ய­வர்கள் என கூறு­வது வேடிக்­கை­யா­னது. அதனை ஏற்­கவும் முடி­யாது.அவர்கள் அப்­பா­விகள். அவர்கள் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்கள். அவர்கள் குற்ற ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினைக் கூட வழங்­கா­த­வர்கள். அவர்­களை பலாத்­கா­ர­மாக புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த முடி­யாது.அதனை வன்­மை­யாக நாம் எதிர்க்­கிறோம்.

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் அர­சியல் கைதி­க­ளுக்கு தண்­டனை பெற்றுக் கொடுக்­கவே சிலர் முயற்­சிக்­கின்­றனர்.அப்­ப­டி­யாயின் குற்­ற­மற்ற இவர்கள் தொடர்பில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யுங்கள். விசா­ரணை செய்து முடிவு செய்­யலாம் என்றார்.

இதன் போது நீதி­பதி ஏனைய அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்­காது இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கவில்லை எனவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படவுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.