தேசிய கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை
இலங்கை தேசிய கொடியில் காணப்படும் வாளேந்திய சிங்கமானது, வன்முறையின் அடையாளமாக கருதப்படுவதாக குறிப்பிட்டு அதனை நீக்குமாறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டத்தின்போது இந்த கருத்து முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் படம் ஒரு இனத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகவும் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் தேசியக் கொடியின் வடிவமைப்பு இருக்கவேண்டும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியல் சாசனத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க காத்திரமான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.