Breaking News

வெளிநாட்டு நீதிபதிகளை ஜனாதிபதி ஒருபோதும் ஏற்கமாட்டார் – பைசர் முஸ்தபா

போர் தொடர்பான பொறுப்புக்கூறல் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதை ஜனாதிபதியோ, அரசாங்கமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் இலங்கையின் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உள்நாட்டு விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளமாட்டார்.

 அரசாங்கமும் அதனை எந்தவொரு சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளாது. அதேவேளை இந்த விசாரணைகளுக்கான தொழில்நுட்ப உதவிகள் வெளிநாட்டில் இருந்து பெறப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.