அடுத்த மாதம் பங்களாதேஸ் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம், பங்களாதேசுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, டாக்காவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக டாக்காவுக்கும் கொழும்புக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேசுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். எனினும், அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 2013, 2014ஆம் ஆண்டுகளில் அவர் டாக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த வாரம் ஜேர்மனிக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.