தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேர் கொண்ட குழு
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக, 10 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் இருந்து தலா இருவரை நியமிப்பதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த புதன் கிழமை இரவு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் கொழும்பில் உள்ள அலுவலகத்தில் அவசரமாக கூடியது.
இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் கூட்டமைப்பிலுள்ள புளோட் கட்சி இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கவேண்டும் என கட்சியின் தலைவர் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.