Breaking News

வட்டுவாகலில் இறால்பிடியில் ஈடுபட கடற்படை, இராணுவத்தினரால் தடை!

முல்லைத்தீவு இறால்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் தடை விதித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த பெரேராவிடம் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். வட்டுவாகல் பாலத்திலிருந்து பெருங்கடலுக்குச் செல்லும் இருபுறங்களிலும் கடற்படையினரும் இராணுவத்தினரும் நிலைகொண்டுள்ளதாகவும் குறித்த இப்பகுதியிலேயே இறால் பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

மேற்படி நிலைமை தொடர்பாக கடந்த ஒருவாரத்துக்கு முன்னரும் முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடமும் கடற்றொழிலாளர்களினால் மனுவொன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.