Breaking News

ஜேர்மனி செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் பெப்ரவரி 13ஆம் திகதி இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஜேர்மனிப் பயண சந்திப்புகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு வேலைகளில்  வெளிவிவகார அமைச்சும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் இலங்கை ஜனாதிபதியுடன் பெர்லின் செல்லவுள்ள பிரதிநிதிகள் குழு இன்னமுமும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தப் பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவின் பயண நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதற்காக, சில நாட்கள் முன்னதாக,  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பெர்லின் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ய