Breaking News

ஜகர்த்தா தாக்குதலுக்கு IS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஆறு உயிர்களை காவு கொண்ட தீவிரவாத தாக்குதலுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் நட்பு பிரச்சார அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த செய்தி குறிப்பிடபட்டுள்ளது.இருப்பினும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளி வரவில்லை.

ஆனால், பாரிஸ் தாக்குதலுக்கு காரணமாக ஐ.எஸ். அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடுமென இந்தோனேசியா பொலிஸார் சந்தேகம் வெளியீட்டுள்ளனர்.