ஊடகவியளாலர்களை ஊதிவிட்டுச் சென்ற மஹிந்த
காலஞ்சென்ற எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பஹாவில் உள்ள அன்னாரின் வீட்டிற்கு சென்றிருந்த போது இடம்பெற்றது.
இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள்கேள்வி கேட்டனர். பொருத்தமில்லாத, எந்தவித சம்பந்தமும் இல்லாத கேள்விகள் சிலவற்றை கேட்டனர், அதற்கு முன்னாள் ஜனாதிபதி, இறந்தவீடு, திருமண வீடு மற்றும் அரசியல் மேடைகளின் வித்தியாசங்களை அறிந்து கொள்ளுமாறு அவர்களுக்கு பதிலளித்தார்.
அந்த உரையாடல் வருமாருமாறு….
ஊடகவியளாலர் – உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற இதுபோன்றவர்களுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்குவீர்களா? உங்களிடம் மீண்டும் வந்தால் நீங்கள் அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
மஹிந்த ராஜபக்ஷ – நான் நினைக்கின்றேன் கதைப்பது தவறு. மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தால் நீங்கள் அரசியல் நோக்கமாக வேறு கேள்விகள் கேட்பது தவறு. அது நீங்கள் முழுமையாக அரசியல் நடத்துகிறீர்கள். அதன் காரணமாக இறந்த வீடுகளை தெரிவு செய்யுங்கள் திருமண வீடுகளை தெரிவு செய்யுங்கள், அரசியல் மேடைகளை தெரிவு செய்யுங்கள்.
முன்னாள் ஜனாதிபதி அவ்வாறு கூறிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.