சந்திரிக்கா,மஹிந்த மேடை வேறு, பிரச்சாரம் ஒன்று-ஸ்ரீ.ல.சு.க. தீர்மானம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இரு ஜனாதிபதிகளும் ஒரே மேடையில் கொண்டுவருவது சாத்தியப்படாது போனாலும், வெவ்வேறு மேடைகளிலாவது கட்சிக்காக செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இத்தேர்தலில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு போட்டியிட எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஸ்ரீ ல.சு.க. சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் மேலும் அறிவித்துள்ளார்