Breaking News

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி இன்று கொழும்பு வருகிறார்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான இலங்கைக்கான அரசாங்கத்தின் செயல்மு றைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானின் போர்க்குற்ற விசாரணை நீதிபதியான மோட்டூ நுகுசி இலங்கை வரவுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதற்கு உதவும் நோக்கிலேயே, ஜப்பான் சிறப்புப் பிரதிநிதியை இன்று கொழும்புக்கு அனுப்பிவைக்கவுள்ளது.கம்போடியாவில் கெமர் ரூஜ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விசாரித்து வரும் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த மோட்டூ நுகுசி என்ற நீதிபதியே ஜப்பானிய பிரதிநிதியாக கொழும்பு வரவுள்ளார்.

இவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.