பேரூந்து பயணக் கட்டணம், அதிகரிக்கப்படும் என எச்சரிக்கை
டீசல் விலையை அரசாங்கம் குறைக்கவில்லை என்றால், பேரூந்துக்கான குறைந்த பட்ச பயணக் கட்டணத்தை அதிகரிக்கவிருப்பதாக, அகில இலங்கை பேரூந்து நிறுவன சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் டீசலின் விலையை குறைக்க வேண்டும்.
அவ்வாறு குறைக்கப்படாவிட்டால், தற்போது 8 ரூபாவாக இருக்கின்ற குறைந்த பட்ச பேரூந்து பயணக் கட்டணம், 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.