Breaking News

நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைக்­கு­ம் - சம்பந்தன் நம்­பிக்கை

பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்றும் பிரே­ரணை இன்­றைய தினம் நிறை­வேற்­றப்­படும் . தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு தீர்வைத் தரும் சபை­யாக பாரா­ளு­மன்றம் அமை­ய­வுள்­ள­தோடு தீர்­வைத்­தரும் ஆண்­டாக இவ்­வ­ருடம் அமைய வேண்­டு­மென நாம் எதிர்­பார்க்­கின்றோம் என்று த.தேகூ. அமைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

இன்­றைய அர­சியல் சூழலும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வும் என்ற விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்றில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்

நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்று புதிய அர­சாங்­கத்தால் முன்­வைக்­கப்­ப­டு­மென த.தே.கூ. நம்­பிக்கை கொண்­டுள்­ளது. அதி­காரம் அற்ற எந்த தீர்­வையும் நாம் ஏற்­போ­மென யாரும் அவ­நம்­பிக்கை கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் இன்­றைய நிலைப்­பா­டுகள் எமக்கு திருப்தி அளிப்­ப­தா­கவும் நம்­பிக்கை தரு­வ­தா­கவும் அமை­கின்­றன. . பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் அமைப்பு சபை­யாக மாற்றும் இன்­றைய கைங்­க­ரி­ய­மா­னது தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஒளி­யூட்­டு­வ­தாக அமை­கி­றது. அர­சியல் அமைப்பு சபைக்கு தமிழ் மக்கள் சார்பில் யாரும் தமது ஆலோ­ச­னை­களை முன்­வைக்க முடியும். அந்த ஆலோ­ச­னைகள் ஆரோக்­கியம் கொண்­ட­தாக அமை­வ­துடன் தென்­னி­லங்கை சக்­தி­களை குழப்­பாமல் கூறப்­ப­டு­மானால் நன்மை தரும்.

எவர் வேண்­டு­மா­னாலும் அர­சியல் தீர்வு பற்றி கருத்­துக்­களைக் கூறலாம். ஆனால் குழப்­பாமல் கூறு­வது நன்மை தரும். குறிப்­பாக சிங்­கள மக்­க­ளையும் சிங்­களத் தலை­வர்­க­ளையும் குழப்­பாமல் நாங்கள் இத்­தீர்வைத் தான் விரும்­பு­கி­றோ­மென்று கூற விரும்­பு­கின்­ற­வர்கள் கூறட்டும். இதற்கு கூட்­ட­மைப்பு ஆலோ­சனை தெரி­விக்கப் போவ­தில்லை. எல்­லோ­ரு­டைய ஆலோ­ச­னை­க­ளையும் நாங்கள் உள்­வாங்­குவோம் நிரா­க­ரிக்க மாட்டோம்.

யாழ்ப்­பா­ணத்தில் காணி­களை மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்­கான முயற்­சிகள் அர­சாங்­கத்தால் அண்­மைக்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அண்­மையில் யான் யாழ்ப்­பாணம் சென்ற போது சில பிர­தே­சங்­க­ளுக்கு சென்று பார்­வை­யிட்டு வந்தேன். பல இடங்­களில் இரா­ணு­வமும் இல்லை மக்­களின் குடி­யி­ருப்­புக்­க­ளு­மில்லை. ஆனால் வேலி போட்டு அடைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அக்­கா­ணிகள் யாராலும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இவ்­வி­டயம் தொடர்பில் நான் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து இரா­ணுவம் பயன்­ப­டுத்­தாத காணி­களை உடனே விடு­வி­யுங்கள் என்று கேட்டுக் கொண்­ட­தற்கு அமை­யவே அண்­மையில் காணிகள் விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்து வரப்­ப­டு­கின்­றன. வலி­காமம் உள்­ளிட்ட முழுப்­பி­ர­தே­சங்­களில் இவ்­வாறு இருக்கும் காணி­களை அதா­னிக்க முடிந்­தது. இவ்­வாறு விடு­விப்­பது சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டதன் நிமித்­தமே நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போ­தைய ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வரை சிறு­பான்மை சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதை வெளிப்­ப­டை­யாக கூறி­வ­ரு­கிறார். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரைப் பொறுத்­த­வரை இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள். இதே போன்றே முற்­போக்கு சிந்­தனை கொண்­ட­வர்­களும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டு­மென்­பதில் ஆர்வம் காட்­டி­வ­ரு­வ­தானால் நல்­ல­தொரு சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதை முறை­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் தமது அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி வாழும் சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதி­கா­ரங்கள் கிடைக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எந்த சலு­கை­க­ளையும் எதிர்ப்­பார்க்­காமல் எல்­லா­வற்­றையும் புறந்­தள்ளி எமது மக்கள் இருந்து வந்­துள்­ளார்கள். எம்­மக்கள் எவ்­வ­ளவோ விட­யங்­களை இழந்­துள்­ளார்கள், அழிந்­துள்­ளார்கள். நல்­ல­தொரு அர­சியல் தீர்வைப் பெற வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே அனர்த்­தங்­களை அனு­ப­வித்து அட்­டூ­ழி­யங்­களைப் பொறுத்­துக்­கொண்டு வாழ்ந்­து­வந்­தி­ருக்­கி­றார்கள். எனவே அதி­காரம் அற்ற தீர்வு கிடைக்­கு­மாயின் அத்­தீர்­வினால் எந்­தப்­ப­ல­னையும் எமது மக்கள் அடையப் போவ­தில்லை.

இது விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வாரம் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோரை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது. ஜனா­தி­பதி திறந்த மன­துடன் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்றார். அனைத்து சமூ­கங்­க­ளையும் திருப்­தி­ப­டுத்த வேண்டும், நல்­லி­ணக்கம் காணப்­பட வேண்­டு­மென்­ப­தற்­காக உழைத்து வரு­கின்றார். எந்­த­வொரு தீர்வும் 2016 ஆம் ஆண்­டுக்கு முன் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும், கொண்டு வரப்­ப­ட­வில்­லை­யாயின் தமிழர் பிரச்­சி­னைக்கு முடிவு காணப்­ப­ட­மு­டி­யாத சூழ்­நி­லையே இலங்­கையில் உரு­வாகும். இக்­க­ருத்தை நான் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­வு­ட­னேயே எடுத்துக் கூறி­யுள்ளேன். பிர­த­ம­ருக்கும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளேன்.

இன்று பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள அர­சியல் நிர்­ணய சபைத் தீர்­மா­ன­மா­னது நீண்­ட­கால தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண உதவும் என நம்­பு­கிறேன்.

சில நாடு­களில் இன­ரீ­தி­யான, மொழி ரீதி­யான மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க சில ஒழுங்­குகள் இருக்­கின்­றன. வெவ்­வேறு இனத்தை, மொழியைச் சார்ந்த மக்கள் தமக்­கான சுய அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அல­குகள் பிரிக்­கப்­ப­டு­வ­தற்கு சந்­தர்ப்­பங்­களும் வழி­மு­றை­களும் உண்டு. பெல்­ஜி­யத்தில் வட­பு­ல­மாக டச் மொழி பேசும் மக்கள், தென்­பு­ல­மாக பிரான்ஸ் மொழி பேசும் மக்கள், மேற்கு புற­மாக ஜேர்மன் மொழி பேசும் மக்­களும் இருக்­கின்­றார்கள். எனவே பிர­தேச ரீதி­யாக இந்த மக்­க­ளுக்கு சுயாட்­சி­யுண்டு. பிரான்ஸ் பேசும் மக்கள் மத்­தியில் டச் பேசும் மக்­களும் டச் பேசும் மக்கள் மத்­தியில் பிரான்ஸ் பேசும் மக்­களும் கூட வாழு­கின்­றார்கள். இங்கு இன­ரீ­தி­யாக, மொழி ரீதி­யாக அதி­கா­ரங்கள் கொண்ட கவுன்­சில்கள் உள்­ளன.

இவ்­வித அதி­காரப் பகிர்வின் மூல­மாக பிர­தேச ரீதி­யாக மாத்­தி­ர­மல்ல இன­ரீ­தி­யாக, மொழி­ரீ­தி­யாக அவர்கள் திருப்தி காணும் வகையில் சுயாட்சி வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று பல நாடுகளில் உண்டு. இவ்விதமான ஒழுங்கை நாம் மேற்கொள்ள முடியும்.

பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது வடமாகாணம் ஒரு பிராந்தியம். கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்கள். மாகாண எல்லைக்கு அப்பால் பிராந்தியங்கள் இணைய முடியாது என்பதுதான் அவ்வெப்பந்தத்தில் கூறப்பட்ட விடயமாகும். மாகாணங்களுக்கு உள் இணையலாமென்பது அதன் சாரம்சமாகும்.

ஆரம்பத்தில் எவ்விதமாக இணைப்பு மேற்கொள்ளப்பட்டதோ அதே போன்றதொரு நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவினால் இழைக்கப்பட்ட தீங்குகள் புதிய அரசாங்கத்தால் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.