Breaking News

முள்ளிவாய்க்கால் கிழக்கில் குண்டுவெடிப்பு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் சற்று முன்னர் குண்டொன்று ஒன்று வெடித்துள்ளது.

வீட்டு முற்றம் பெருக்கி குப்பைக்கு தீவைத்த போது நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டே இவ்வாறு வெடித்துள்ளது.சம்பவத்தில் 52 வயதான தம்பையா சிறிகாந்தா (சிறி) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர், பொதுமக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை அரசினர் வைத்தியசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.