விக்கினேஸ்வரனின் பாதை பயங்கரமானது - சம்பிக்க கூறுகிறார்
தேசிய ஐக்கியத்தை பலப்படுத்த வேண்டு மாயின் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நோக்கி சிந்திக்க வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களையும் எம்முடன் இணைத்துக்கொண்டு பயணிக்க புதிய அரசியல் அமைப்பே சிறந்த வழிமுறையாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வ ரனின் பாதை பயங்கரமானது. ஆனால் தமிழ் மக்கள் பிரிவினையை முழுமையாக வெறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பலப்படுத்தி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் நாட்டில் மூவின மக்களும் அமைதியாக வாழக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை மக் கள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. அதேபோல் சட்ட, நீதி செயற்பாடுகள் சுயாதீனப்படுத்தப்பட்டு மக்கள் நீதியின் செயற்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படும் வகையில் ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊழல், மோசடிகள் இல்லாத ஒரு அரசி யல் கலாசாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக சிறுபான்மை மக்களை இணைத்துக்கொண்டு ஐக்கிய இலங்கை என்ற நிலை யில் செயற்படும் வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டது. கடந்த காலத்தில் சர்வதேச நாடுகள் எமக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து எம்மை கட்டுபடுத்த முயற்சித்தன. அதேபோல் நாட்டில் பிரிவினைக்கான சூழல் ஒன்று வடக்கில் உருவாகி வந்தது. சர்வதேச நாடுகளின் உதவியுடனும், சர்வதேச அமைப்புகளின் முழுமையான ஆதரவுடனும் வடமாகாணத்தில் ஒரு முரண்பாட்டு சக்தி பலமடைந்து வந்தது.
அத்தோடு மக் கள் மத்தியில் முரண்பாடுகளும் விமர்சனங்களும் பலமடைந்து காணப்பட்டது. பொரு ளாதார ரீதியில் சிக்கல் நிலைமைகள், நாட் டின் தேசிய அபிவிருத்தியில் பாரிய முடக் கம் என நாட்டை வீழ்த்தும் பாதையில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்தது. எனினும் அவ்வாறான ஒரு நிலைமையில் இருந்து நாட்டை காப்பாற்றும் தெளிவான வேலைத்திட்டம் ஒன்று மஹிந்த அரசாங்கத்தில் இரு க்கவில்லை.
அவ்வாறு இருக்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் பாரிய திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அதாவது ஆட்சி மாற்ற த்தின் பின்னர் கூட்டு அரசாங்கமாக நம் அனைவரும் அந்த அழுத்தங்களில் இருந்து விடுபடக்கூடிய நிலைமை ஒன்று ஏற்பட்டது. நாடு மோசமான பாதையில் பயணித்த நிலையில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது. அதேபோல் மூவின மக்களையும் ஒன்றிணைத்து நாட்டில் பலமான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடிந்தது. எனினும் இந்த ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த வேண்டுமாயின் அடிப்படையில் பலப்படுத்த வேண்டும். அதை புதிய அரசியல் அமைப்பு மாற்றத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
எனினும் நாட்டில் புதிய அரசியல் அமை ப்பு ஒன்றை உருவாக்கி நாட்டை துண்டாட முயற்சிப்பதாக இனவாத பிரிவினர் பொய் யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நாளை பாராளுமன்றத் தில் இந்த அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான ஆலோசனை மற்றும் அது தொடர்பில் ஆராயும் குழுவினரை நியமிக் கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் ஆராய்ந்தே இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நோக்கி பயனிப தால் நாட்டில் எந்தவித பிரிவினையும் ஏற் படாது. தமிழ் முஸ்லிம் மக்களையும் எம்முடன் இணைத்து பயணிக்க இதுவே சிறந்த வழிமுறையாகும்.
நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்ட பின் னர் பிரதமருக்கு அதிகாரங்கள் பலப்படுத்தப்படும். அவ்வாறான நிலையில் பிரதமரு க்கு கட்டுப்பட்ட வகையிலேயே மாகாணசபைகள் செயற்பட வேண்டும்.
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தவறான பாதையில் பயணிக்கின்றார். இன்றும் அவர் பிரிவினைவாத நிலைப்பாட் டில் தான் உள்ளார். காரணம் என்னவெனில் அமிர்தலிங்கம், செல்வநாயகம் எவ்வாறு தனிநாட்டு போராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் தனித்துவ தலைவர்கள் ஆனா ர்களோ அதேபோல் இவரும் ஒரு தலை வராக முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் சமூகம் பிரிவின வாத கொள்கையை முழு மையாக வெறுக்கின்றனர். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தை பலப் படுத்தும் வேலைத்திட்டத்தில் கடந்த காலத்தில் இணைந்து கொண்டனர். பாராளு மன்றத்திலும் அர சாங்கத்தை ஆதரி த்து செயற்படுகின்ற னர். இது ஜனநாயக ரீதியிலான ஒரு செயற்பாடாகும்.