Breaking News

''மன்னிப்பு கிடைக்குமென ஒருநாளும் நினைக்கவில்லை''

அமைச்சராக இருந்தபோது தன்னைக் கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் சிவராஜா ஜெனிபனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிபனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினரான சிவராஜா ஜெனிபனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த வருடம் தீர்ப்பளிக்கப்பட்டது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிபனின் முதுகில் தட்டிய ஜனாதிபதி, கைகளை பிடித்து வணக்கம் சொன்னார்.

''சார் பொதுமன்னிப்பு வழங்குவீர்கள் என்று நான் ஒருநாளும் நினைக்கவில்லை. இதனைக் கேள்விப்பட்டதும் என்னால் நம்பமுடியவில்லை. என்னை விடுவித்த சாருக்கு நன்றிகள்.'' என்று ஜெனிபன் ஜனாதிபதிக்குத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ''இந்த சமூகத்தில் நல்ல பிரஜாயாக நீங்கள் வாழ வேண்டும். அதுதான் இந்த நாட்டிற்கும், எனக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய கடமை'' என்று குறிப்பிட்டார்.