Breaking News

செந்தூரனுக்கு விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதி அஞ்சலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான சிவராஜா ஜெனிகன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தன்னுயிரை தியாகம் செய்த செந்தூரனின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பொலன்னறுவையில் வைத்து அவர் மீது கொலை முயற்சி மேற்கொண்ட நபருக்கே இவ்வாறு நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வின் போதே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாணவன் செந்தூரனின் வீட்டிற்கு இன்று (சனிக்கிழமை) சென்ற சிவராஜா ஜெனிகன் அங்கு செந்தூரனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான செந்தூரன் யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.