இன்று ஜனாதிபதி, பிரதமர் விசேட உரை
புது வருடத்துக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறுகின்றது. இன்றைய அமர்வில் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முழுநாள் விவாதத்தின் பின்னர் இந்த பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் இன்று சபையில் உரையாற்ற இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.