ஆட்கடத்தல் வழக்கில் ஹிருணிகாவைக் கைது செய்ய உத்தரவு
தெமட்டகொடவில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பபவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைது செய்ய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஹிருணிகாவைக் கைது செய்யும் இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டதாக, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு தொடர்பு இருப்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களின் வாக்குமூலங்கள் அதனை உறுதி செய்திருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா அடுத்தவார முற்பகுதியில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.