Breaking News

அச்சத்தில் மஹிந்த அணி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் அவசர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ஆதரவு அணியினைச் சேர்ந்த பலரும் தேசிய அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

இந்தநிலையிலேயே அதனைத் தடுக்கும் வகையில் இவ்வாறான அவசர கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கலந்துரையாடல்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, நாடாளுமன்றம் அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றப்படுவதற்கு தமது அணி எதிர்ப்பை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.