Breaking News

வவுனியா மாணவி யாழ் மருத்துவபீடத்தில் 5 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை!!

யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.

எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஐந்து துறைசார் தங்க பதங்கங்களை பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்ததை தண்டிக்கொண்ட தமிழ் மாணவர் என்ற பெருமையையும் தனதாக்கி யாழ் பல்கலைகழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

குழந்தை மருத்துவம், மகப்பேற்று மருத்துவம், பொது மருத்துவம், மருத்துவ சிகிச்சை போன்ற துறைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்று ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதுடன் மேலதிகமாக இரண்டு நினைவு பரிசில்களையும் வென்றுள்ளார்.

இவர் வவுனியா ஓமந்தை பெரிய விளாத்திக்குளம் சின்னத்தம்பி செல்வராசமணி அவர்களினதும் சாஸ்திரிகூழாங்குளம் காலஞ்சென்ற பத்மநாதன் கனகம்மா தம்பதிகளின் பேர்த்தியும் சிவகுமார் சத்தியவாணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவியுமாவார்.