2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் -எல்லா இராசிகளுக்கும்
இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை, தேய்பிறை சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி செளபாக்கிய யோகத்தில் பிறக்கிறது.
லக்னத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது சிறப்பாகாது. அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவ்ர்களுக்கு சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பிறருடன் சுமுகமான உறவு இராது.
சண்டை, சச்சரவுகள் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களில் கவனமுடன் ஈடுபடுவது அவசியமாகும். 2-ல் செவ்வாய் இருப்பதால் வம்பு, வழக்குகள் அதிகமாகும். நெருப்பு, ஆயுதம், மின்சாரம் ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகும்.
3-ல் சுக்கிரனுன் சனியும் இருப்பதால் தகவல் தொடர்பு இனங்கள் வளர்ச்சி பெறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். சகோதர ஒற்றுமை உண்டாகும். சமுதாஅய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
4-ல் சூரியனும் 12-ல் குருவும் இருப்பதால் ரியல் எஸ்டேட் இனங்கள் மூலம் அதிகம் லாபமிராது. சிலருக்கு நஷ்டமும் உண்டாகும்.
அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அலுவலகப்பணியாளர்களுக்கும் பிரச்னைகள் சூழும். 5-ல் புதன் இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்கள் லாபம் தரும். 12-ல் சந்திரனும் குருவும் இணைந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். 5-8-2016 வரை சில இடர்ப்பாடுகள் ஏற்படும். காடு, மலை, வனாந்தர்னகளில் தொழில் புரிபவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படும். எதிரிகளால் பிரச்னைகள் உண்டாகும். விஷத்தாலும், விஷக் காய்ச்சலாலும், சங்கடம் ஏற்படும்.
6-8-2016 முதல் விசேடமான நன்மைகள் உண்டாகும். ஆட்சியாளர்களின் மூலம் பொதுமக்களுக்கு நலத்தடங்கள் பல செயல்படுத்தப்படும். உயர் பதவி, பொறுப்பில் உல்லவர்கள் கொளரவிக்கப்படுவார்கள். மருத்துவ்சம், இரசாயனம், விஞ்ஞானம் ஆன்மிகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு வருடப்பின்பகுதி மிகச் சிறப்பாக அமைஒயும்.
மத சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு கூடும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். அறப்பணிகள் ஏராளமாக நடக்கும். மக்கள் மமதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சத்காரியங்கள் அதிகம் நடக்கும்.
வருட முன்பகுதியில் துர்கை, காளி ஆகியோரது வழிபாட்டின் மூலம் நலம் பெறலாம். வருடப்பின்பகுதி சிறப்பானதாகும்.
2+0+1+6= 9.
செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணில் இந்த ஆண்டு பிறக்கிறது. செவ்வாய்பகவானின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் தேதிகளான 9, 18, 27-ல் பிறந்தவர்களுக்கும், செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும்.
ஜனன ஜாதகத்தில் செவ்வாயானவர் தன் சொந்த வீடுகளான மேஷத்திலோ, விருச்சிகத்திலோ உச்ச வீடான மகரத்திலோ இருக்கப் பெற்றவர்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும்.
செவ்வாய் பலம் பெற்று, செவ்வாய் தசை தற்சமயம் நடப்பவர்களுக்கும் இந்த ஆண்டு விசேடமான நற்பலன்களைத் தரும்.
செவ்வாய் பூமி காரகன் ஆவார். இதனால் இந்த ஆண்டில் பூமி மூலம் ஆதாயம் கிடைக்கும். செவ்வாய் சகோதர காரகர் ஆவார். இதனால் சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். மனைவியின் உடன்பிறந்தவர்களாலும் நலம் ஏற்படும்.
செவ்வாய் வீர, தீர, பராக்கிரமங்களுக்குக் காரகர் ஆவார். செவ்வாய் பலம் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டில் விருதுகளும் பட்டங்களும், அரசு சன்மானமும் கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். இன்ஜினீயரிங் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். குறுஇப்பாக மெக்கானிக்கல் இன் ஜினீயர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.
சிவப்பு நிறப்பொருட்கள் லாப்வம் தரும். கட்டடப்பொருட்களாலும் ஆதாயம் கிடைக்கும். அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மதிப்பு உயருவதுடன் வருமானமும் அதிகம் கிடைக்கும். செப்டம்பர் முதல் வருடம் முடிய உள்ள காலம் விசேடமானதாக இருக்கும். இந்த ஆண்டு செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பதாலும், செவ்வாய் இந்த ஆண்டின் பெரும்பகுதிக் காலம்
விருச்சிகத்தில் சனியுடன் கூடியிருப்பதாலும் விருச்சிகம் கால புருஷனின் 8-ஆவது ராசி என்பதாலும் 20-2-2016 முதல் 16-9-2016 வரை உள்ள காலப்பகுதியில் தீ, மின்சாரம், எரிபொருள், வெடிப்பொருள், ஆகியவற்றால் சங்கடம் உண்டாகும். விர்ச்சிகம் ஜல ராசி என்பதால் ஜல பயம் ஏற்படும். சமூக விரோதிகளால் பிரச்னைகள் உண்டாகும். பூமி அதிர்வு போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்படும்.
செவ்வாய்க்கு அதிதேவதையான முருகப்பெருமானை இந்த ஆண்டு முழுவதும் எல்லோரும் வழிபடுவது நல்லது. சுப்பிரமணிய ஜப, ஹோமம் செய்யலாம். சுப்ரமணிய புஜங்கம் பாராயனM செய்வதும் சிறப்பாகும். முருகனுக்குரிய காயத்ரி, கவசம், மற்றும் மந்திரங்களைச் சொல்வதும் கேட்பதும் நல்லது. நேர்மையாகவும், குறுக்கு வழிகளில் செல்லாமலும் இறைச் சிந்தனையுடன் இருப்பதன் மூலம் இறைவனின் நல் அருளுக்குப் பாத்திரமாகலாம்.
2016 புத்தாண்டில் மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு 10-8-2016 வரையிலும் அதன் பிறகு ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் உண்டாகும். இனி, இந்தப் புத்தாண்டில் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம்.
அனைத்து இராசிகளுக்கும்.
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் |
தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |