Breaking News

5ம் தர புலமைபரீட்சை வெட்டுப்புள்ளி திருத்தத்திற்கு எதிராக ஆசிரியர் சங்கம் முறைப்பாடு

கடந்த வருடம் இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைபரீட்சை சம்பந்தமாக கொழும்பில் உள்ள பிரதான 8 பாடசாலைகளின் புலமைபரீட்சை வெட்டுப்புள்ளிகள் திருத்தத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

முறைப்பாட்டை கையளித்த பின்னர் அதன் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , ’8 பாடசாலையில் மற்றும் வெட்டு புள்ளிகள் திருத்தப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு அநீதி இடம் பெற்றுள்ளது’ என்றார்.

கொழும்பு ரோயல், ஆனந்த, நாலந்த, டீ.எஸ்.சேனாநாயக்க, தேஜ்டன், மஹானாம மற்றும் பன்னிபிட்டிய பாடசாலைகளிலும் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை சேர்பதற்கான வெட்டு புள்ளிகளை ஒரு புள்ளிகளால் குறைத்து கல்வி அமைச்சி நேற்று அறிவித்தது.

கொழும்பு ராஜகிரி வித்தியாலயத்தில் தரம் 6க்காக மேலதிக வகுப்பொன்றை ஆரம்பித்தது ,அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , எந்த வித அறிவியல் அடைப்படைகளும் இன்றி வெட்டுப்புள்ளிகளை இவ்வாறு குறைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.