நவாலி தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - சந்திரிக்கா
நவாலித் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு தவறான சம்பவம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், 1995ஆம் ஆண்டில் 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட நவாலித் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு தவறான சம்பவமாகும். அதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
குறித்த செய்தியை அறிந்தபோது விமானப்படையையும் இராணுவத்தையும் நோக்கி நான் உரத்தி கத்தினேன். விடுதலைப் புலிகளின் சிறிய முகாம் என்று நினைத்தே இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதற்கு இராணுவமும் அரசும் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.