Breaking News

சம்பந்தனின் கருத்துக்கு பேரவை வரவேற்பு

தமிழ் மக்கள் பேரவையினால் உருவாக்கப்படும் அரசியல் தீர்வு குறித்த வரைபை பரிசீலிக்க தயாராகவிருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளமையை அவ்வமைப்பு வரவேற்றுள்ளது.

இது குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்மக்கள்பேரவையால்தயாரிக்கப்படும்தீர்வுத்திட்டவரைபுதமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் தரப்படுமாயின் தாம் அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் கருத்தை நாம் வரவேற்கின்றோம். கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கூட்டத்தையடுத்து ஊடகவியலாளர்மாநாட்டை நடாத்திய கூட்டமைப்பின் தலைவர் அங்குகருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்திருந்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரின் இந்தகருத்தை நாம் வரவேற்பதுடன் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்ட வரைபானது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடமும் கையளிக்கப்படும். தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள தீர்வுத்திட்ட வரைபு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடமும் கையளிப்பது என்ற தீர்மானம் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோதே எடுக்கப்பட்டது.






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மக்கள ஆணைக்கு உட்பட்ட விதத்தில் பேரவையால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்வுத்திட்ட வரைபு தமிழ்மக்களிடம் கொன்டு செல்லப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு,இறுதிவடிவம் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றுள்ளது.