ஈழத்தமிழர் போராட்டத்துடன் தங்கள் போராட்டத்தை ஒப்பிட்ட குர்திஷ் போராளிகள் தலைவர்
ஈழத் தமிழர்களின் போராட்டங்களின் நியாயத்தை உணரத் தவறியது போன்று சர்வதேசம் குர்திஷ் போராளிகளின் போராட்ட நியாயங்களையும் உணரத் தவறியுள்ளதாக சப்ரி ஓக் வேதனைப்பட்டுள்ளார்.
குர்திஷ்தான் தனிநாடு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் குர்திஷ்தான் சமூக ஒன்றியத்தின் (கேசிகே) நிறைவேற்றுக்குழு உறுப்பினரா சப்ரி ஓக் இதுதொடர்பாக அவர்களுக்கு ஆதரவான செய்திச் சேவைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
குறித்த நேர்காணலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயமானது. ஆனால் உலகம் அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுத்ததுடன், அவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கத் தவறியது.
இதன் காரணமாக சுமார் இரண்டு லட்சம் பேர் வரையில் தமிழ் மக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். 2009 இறுதிப் போரின் போது பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமாக தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டுவீச்சுகளில் பெருமளவான அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். எனினும் உலகம் இன்றுவரை அதனைக் கண்டுகொள்ளவில்லை.
குர்திஷ் தான் போராட்டத்திற்கும் அதே நிலைமைதான். எங்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயங்களை உலகம் அங்கீகரிக்க மறுப்பதன் காரணமாக குர்திஷ் இன மக்கள் அநியாயமாக உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.