Breaking News

‪வலி‬ வடக்கு ‪படை முகாம்களை‬ ‪‎இடம்மாற்றுமாறு‬ ‪ஜனாதிபதியின்‬ செயலாளர் ‪உத்தரவு‬

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு படைத் தலைகை்கு ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே நம்பகரமான தகவல் தெரியவருகின்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வின் போது இடம்பெயர்ந்த மக்களுக்கு 6 மாதத்தில் வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

இதன் பின்னரே ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சில அரச அதிபர்கள் மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரிகள் இராணுவத் தரப்பினர் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் வலி.வடக்கில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் படிப்படியாக இது மேற்பொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு இராணுவத் தரப்பினர் தமது முகாம்களை இடமாற்றம் செய்வதற்கு நிதி தேவை என்று கோரியுள்ளனர். இதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நிதி ஒதுக்கீடு தம்மிடம் இல்லைஎன்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.அத்துடன் இராணுவத்தினரின் முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குப் பொருத்தமான இடங்களைப் பார்க்குமாறு படைத்தலைமையிடம் கூறினார் என நம்பகரமாக அறியமுடிகிறது.