இந்திய விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள குறித்த விமானப் படை தளத்தில் சனிக்கிழமை அதிகாலை நான்கு தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் இதில் இரண்டு இராணுவ வீரர்களும் பலியாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த சம்பவத்தின் பின்னர், டெல்லி விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை உயரதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பதான்கோட் விமானப்படை தள தாக்குதலை அடுத்து, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவ வீரர்களின் நடவடிக்கைக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியா எப்போதும் நல்லுறவையே விரும்புகிறது. ஊடுருவல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.