Breaking News

கொழும்பில் “சிங்கத்தின் இரத்தம்“

நாட­ளா­விய ரீதியில் ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் கலா­சா­ர­மொன்று அதி­க­ரித்து வரு­கின்­றது. "சிங்­க­ள­வர்கள் சிங்­கத்தின் வழித்­தோன்­றல்கள்" என்று பெருமை பேசும் வாச­கங்­க­ளுடன் இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

"சிங்கலே" (சிங்­கத்தின் இரத்தம்) என்­பதே குறித்த ஸ்டிக்­கரின் வாச­க­மாகும். சிங்­கள இனப்­பற்­றுள்ள அனை­வரும் தமது வாக­னங்­களில், வர்த்­தக நிலை­யங்­களில் இந்த ஸ்டிக்­கரை ஒட்­டிக்­கொள்ள வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணியில் சிங்­கள பேரி­ன­வாத சக்­திகள் முழு­மூச்­சாக இயங்கி வரு­வ­தோடு நாட்டில் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்தி அதில் குளிர்­காய எத்­த­னிக்கும் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே இலங்­கையின் தேசி­யக் ­கொ­டியில் சிறு­பான்­மை­யி­னரைக் குறிக்கும் பகு­தியை நீ்க்கிய குறித்த இன­வாதக் கும்பல், தற்­போது அதிலும் சிங்­கத்தின் உரு­வத்தை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு இலட்­சினை பொறித்து ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் மூல­மாக இன­வா­தக்­க­ருத்­துக்­களை வெளி­யிட்டும் வரு­கின்­றனர்.

இந்த ஸ்டிக்­கர்கள் கவ­ரக்­கூ­டிய வாச­கங்­களை வர்­ணங்­களை கொண்டு அச்­ச­டித்து விற்­பனை செய்தும் குறிப்­பிட்ட சில பாதை­யோ­ரங்­களில் பலாத்­கா­ர­மாக வாக­னங்­களில் ஒட்­டப்­பட்டும் வரு­கின்­றன. இந்த சிங்க லே என்ற இலட்­சி­னை­யுடன் விற்­பனை செய்­யப்­படும் ரீஷேர்ட்­டுகள் 3,500 ரூபா வரையில் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. இவ்­வா­றான ஸ்டிக்­கர்கள், ரீஷேர்ட்கள் கூடிய விலைக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­வதால் குறித்த இன­வா­தக்­குழு பெருந்­தொ­கையில் வரு­மானம் ஈட்டி வரு­கின்­றது.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் முகநூல் மற்றும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் இந்த பிர­சா­ரங்கள் சூடு­பி­டித்து வரு­கின்­றன. முக­நூலில் குறித்த சிங்க லே பக்­கத்தின் விருப்பு குறி­யீ­டுகள் தற்­போது லட்­சக்­க­ணக்கில் விருப்­புக்­கு­றி­களைப் பெற்­ற­மையும் இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். அது­த­விர இந்த சிங்க இலட்­சி­னை­களை உடலில் பச்சை குத்­தியும் குறித்த இலட்­சினை பொறித்த ரீஷேர்ட்­டுகள் அணிந்து படம்­பி­டித்தும் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பதி­வேற்றும் கலா­சா­ரமும் அதி­க­ரித்து வரு­கின்­றது.

இவ்­வா­றான பிர­சா­ரங்கள் எதிர்­கா­லங்­களில் இனக்­க­ல­வ­ரங்­களை தூண்­டு­வ­தற்­கான முன்­ஆ­யத்­த­மாக இருக்­க­லா­மென்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு எதிர்­கா­லத்தில் இனக்­க­ல­வ­ர­மொன்றைத் தூண்டி பெரும் சேதங்­களை ஏற்­ப­டுத்­தவும் அதன் போது சிங்­க­ள­வர்­களின் சொத்­து­களை குறித்த ஸ்டிக்கர் அடை­யா­ளத்­தி­னூ­டாக பாது­காக்­கவும் திட்­டங்கள் தீட்­டப்­பட்­டுள்­ளதா? என்ற கேள்­வியும் பல­ரி­டையே எழுந்­துள்­ளது.

மேலும் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இனக் கல­வ­ர­மொன்றை ஒரே நேரத்தி்ல் கட்­ட­வீழ்த்து விடு­வ­தற்­கான செயற்­பா­டுகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தற்­கான முன்­னோட்­ட­மாக இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் விற்­பனை தென்­ப­டு­வ­தாக சிவில் அமைப்­புகள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வா­றான செயற்­பா­டு­களை பார்க்கும் போது வேடிக்­கை­யா­கத்தான் தெரியும். எனினும் இவ்­வி­டயம் தொடர்பில் உற்று நோக்கும் போது சிங்­கள பௌத்த மக்­க­ளி­டையே இன­வா­தக்­க­ருத்­துக்­களை தூண்டி பேரி­ன­வா­தத்­திற்கு சார்­பாக திரட்ட விதைக்­கப்­படும் உள­வியல் ரீதி­யாக பிர­சார உத்­தி­யா­கவே இது தெரி­கி­றது. அர­சு­த­ரப்பு இப்­பி­ர­சா­ரத்­திற்கு எதிர்ப்­பினை வெளி­யிட்டு வந்­தாலும் அவை போது­மா­ன­தாக இல்லை. கடந்த 23ஆம் திகதி அமைச்சர் ஹரின் பெர்­ணான்டோ இவ்­வாறு பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எச்­ச­ரித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதே வேளை "சிங்க லே மாபியா" என்ற தலைப்பில் "ராவய" பத்­தி­ரி­கையில் வெளி­யி­ட­டுள்ள கட்­டு­ரையில் பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நாட்­களில் துரி­த­மாக பரவி வரும் "சிங்க லே" என்ற அமைப்பு யாரது தேவைக்­காக எவரால் நடத்­தப்­ப­டு­கி­றது என்­பது தெரி­ய­வில்லை. இருந்தும் இதைப் பார்க்கும் போது ஏதோ­வொரு அமைப்பு திட்­ட­மிட்ட வகையில் இதை பரப்பி வருவதாக தெரியவருகிறது. இதன் பின்னாள் யாரோ ஒரு முக்கியஸ்தகர் செயற்படுகின்றார் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகின்றது. இது ஒரு வேளை மஹிந்த வின் கருவிலிருந்து உருவாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. இற்றைய வரையில் இவர்களது பேஸ்புக் கணக்கு இனவாத கருத்துக்களை பரப்புவதாக மட்டுமின்றி வாகனங்களில் ஒட்டுவதற்கு இலவசமாக ஸ்டிகர்களை வழங்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.