Breaking News

பிரதமர் ரணில் நாளை விசேட உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் வைத்து விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தேசிய அரசாங்கத்தினை கவிழ்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு அணி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், புதிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு அணி ஈடுபட்டுள்ளதுடன், மஹிந்த அணியினைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆத்தமாகி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட உரையாற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த உரையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் நம்பப்படுவதுடன், பலர் மத்தியிலும் கடும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.