Breaking News

நல்லாட்சி அரசில் எமக்கு தீர்வு கிடைக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் நல்லாட்சி அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மலரும் இந்தப் புதிய வருடத்தின் ஆரம்பத்திலேயே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பல நம்பிக்கைகளுடன் மலரும் இந்தப் புத்தாண்டு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டனர்.

இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்:.

“தேசிய இனப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள ஒரு தீர்வை அடைய இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்றவேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை அடைதல், மக்களுக்குப் பயன்தரக்கூடிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல், நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்டல் போன்ற இமாலய பணிகளை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்,

இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.