மைத்திரி –மஹிந்தவை இணைக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அடிப்படை செயற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்னெடுத்து வருகின்றார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றவேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பிளர்கள் தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் தலைமையில் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறும் என தெரியவருகின்றது.
இதற்கு முன்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.