Breaking News

முக்கிய கொலை விசாரணைகளை மேற்கொள்ள கடும் இடையூறு!

முக்கிய கொலை விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லசந்த விக்ரமதுங்க, நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் புலனாய்வு பிரிவினர் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த கொலைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்த உயர் இராணுவ அதிகாரிகள் இன்னமும் குறித்த பதவிகளை வகித்து வருவதனால், விசாரணைகளுக்கு இவர்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்தக் கொலைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணை நடத்தி வருவதுடன் சில கொலைகள் பற்றிய உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், கொலைகளை மேற்கொள்ள புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் இராணுவ அதிகாரிகள் இன்னமும் அதே பதவிகளை வகித்து வருகின்றனர்.இதனால் விசாரணைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இடையூறும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உயர் இராணுவ அதிகாரிகள் கொலையாளிகளை பாதுகாக்க முயற்சித்து வருவதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது