உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு – தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்
இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமானhttp://www.doenets.lk/exam/home.jsf இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில் மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய முடிவுகளின் திருப்பியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணித பிரிவில் ரோயல் கல்லூரி மாணவன் முதலிடம்
2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபெறுகளின்படி கணிதப்பிரிவில் கொழும்பு 7, ரோயல் கல்லூரியின் தசுன் ஜெயசிங்க என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ஏனைய பிரிவுகளின் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
விஞ்ஞானப் பிரிவில் கம்பஹா மாவட்ட மாணவி முதலிடம்
2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி விஞ்ஞானப்பிரிவில், கம்பஹா ரட்னாவெலி மகளிர் வித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
தெபுலி உமேஷா கருணாவலபா என்ற மாணவியே விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
வர்த்தக பிரிவில் குருணாகல் மாவட்ட மாணவன் முதலிடம்
2015 ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி வர்த்தக பிரிவில் முதலிடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலம் பெற்றுள்ளது.
இதன்படி மலியதேவ வித்தியாலயத்தின் மாணவரான எப்.எம் அகில் மொஹமட் என்ற மாணவர் வர்த்தப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
கலைப்பிரிவில் குருணாகல் மாவட்ட மாணவி முதலிடம்
2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருணாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
ஜீவா நயனமாலி என்ற மாணவியே கலைப்பிரிவில் முதல் இடம்பெற்றுள்ளார்.