Breaking News

இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள்



இந்தியாவின் பல பகுதிகளிலும் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 553 இலங்கை அகதிகள் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து அகதிகளாக சென்றவர்களே இவ்வாறு வசித்து வருவதாக அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், யுத்தம் நிறைவடைந்து சமாதானமான சூழல் நிலவும் நிலையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 231 பேர் தாயகம் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடு திரும்பியுள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டும் தமிழகத்திலுள்ள 500 இற்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.