பேரவையின் அரசியலமைப்பு வரைபு நகல் 31 ஆம் திகதி யாழ்.பல்கலையில் வெளியீடு
தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான வரைவு நகல் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து வெளியிடப்படவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.இதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகம் என்பதை ஏற்க வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையின் உப குழு வழங்கிய யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்புக்கான பேரவையின் உபகுழு தயாரித்த நகல் யோசனை நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரவை இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.நகல் யோனையில் இனப்பிரச்சினைத் தீர்விற்கான விடயங்கள் புதிய அரசியல் யாப்பில் எவ்வாறு உள்ளடக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.